"அம்மன் அருள் என்றும் அனைவருக்கும் துணை"

🪔 ✦ 🪔

அருள்மிகு ஶ்ரீ அங்காளம்மன் திருக்கோயில்

நத்தப்பட்டி கிராமம்
வேடசந்தூர் வட்டம்
திண்டுக்கல் மாவட்டம்

🛕 திருக்கோயில் வரலாறு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், நத்தப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அங்காளம்மன் திருக்கோயில், பல ஆண்டுகளாக பக்தர்களின் நம்பிக்கைக்கும் வழிபாட்டிற்கும் உரிய புனிதத் திருத்தலமாக விளங்கி வருகிறது.

இத்திருத்தலம் நத்தப்பட்டி கிராம தாயாதிகள் மற்றும் ஊர் மக்களின் ஒற்றுமையாலும் பக்தியாலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

2005 ஆம் ஆண்டு கோயில் திருப்பணி தொடங்கப்பட்டு, புதிய திருக்கோயில் கட்டப்பட்டு, மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதற்கு முன்பு திண்ணையில் வைத்து பூஜைகள் நடைபெற்று வந்தன.

🙏 தினசரி பூஜை நேரம்

🌅 காலை பூஜை

காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை

🌙 மாலை பூஜை

மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

சிறப்பு பூஜைகள்

அமாவாசை & பௌர்ணமி

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பூஜை முடிந்த பின்னர் மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.

மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி அன்று சிறப்பு பூஜையும் இரவு 8 மணிக்கு அன்னதானமும் நடைபெறும். இரவு முழுவதும் பக்தர்கள் கண் முழித்து இருப்பார்கள்; பூஜை நடைபெறும்.

🎉 ஆடி மாத திருவிழா

📅 திருவிழா காலம்

அருள்மிகு ஶ்ரீ அங்காளம்மன் திருக்கோயிலின் ஆண்டு திருவிழா ஆடி மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. திருவிழா திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை நிறைவடைகிறது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மயான கொள்ளை பூஜை நடைபெறுகிறது. மேலும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெறும்.

🚩 ஊர்வலம் மற்றும் வரவேற்பு

திருவிழா தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக அம்மன் ஒவ்வொரு கிராமத்திற்கும் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பின்னர் பூத்தாம்பட்டியில் இருந்து தேவநாயக்கன்பட்டி வழியாக, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் நத்தப்பட்டி கோயில் வீட்டிற்கு பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் அழைத்து வரப்படுகிறார்.

மாமன்–மைத்துனர்கள் பொங்கல் கூடைகளுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டு அம்மனை வரவேற்கின்றனர். மலர் அலங்காரம் மற்றும் விளக்குகளால் வீதிகள் பக்தி நிறைந்த திருவிழா சூழலை உருவாக்குகின்றன.

🔥 மயான பூஜை மற்றும் கோயில் நிகழ்ச்சிகள்

அம்மன் கோயில் வீட்டிற்கு எழுந்தருளிய பின், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கோயிலுக்கு அழைத்து வரப்படுகிறார்.

கோயிலுக்கு வரும் வழியிலேயே மயான கொள்ளை பூஜை நடைபெறும். தீபங்கள், மங்கள இசை, மந்திர ஓசைகள் மற்றும் பக்தர்களின் பக்தி முழக்கங்கள் இணைந்து ஆன்மிக சூழலை உருவாக்குகின்றன.

பின்னர் பூசாரிகள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு, அபிஷேகத்திற்காக பொங்கல் எடுத்துச் செல்லப்படுகிறது.

🍚 பொங்கல் மற்றும் தீர்த்தம்

பொங்கல் வைக்கும் முன்பு பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்படும். பின்னர் பூசாரிகளுக்கு கங்கணம் கட்டப்பட்டு பக்தர்கள் அனைவரும் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.

அதன் பின்னர் மீண்டும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, அம்மனுக்கு பொங்கலால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

🐐 காலை நிகழ்வுகள்

மறுநாள் காலை 8.00 மணியளவில் கிடாய் வெட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.

அனைத்து கிடாய்களும் நிப்பாட்டப்பட்டு மஞ்சள் நீர் தெளிக்கப்படும். கிடாய்கள் அனைத்தும் குளிக்கிய பின், மரபு முறையின்படி கிடாய் வெட்டப்படுகிறது.

இது திருவிழாவின் சுத்திகரிப்பு மற்றும் நிறைவு நிகழ்வாக கருதப்படுகிறது.

🍛 விருந்து மற்றும் மரியாதை

அபிஷேக ஆராதனை நிறைவடைந்த பின், பக்தர்கள் அனைவருக்கும் கருவாட்டு குழம்பு உள்ளிட்ட பாரம்பரிய அன்னதான விருந்து வழங்கப்படுகிறது.

மாமன்–மைத்துனர்களுக்கு மாலை, சந்தனம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றால் சிறப்பு மரியாதை செலுத்தப்படுகிறது.

பின்னர் அவரவர் இல்லங்களில் குடும்ப விருந்தும், உறவினர்களின் சந்திப்பும் மகிழ்ச்சியுடன் நடைபெறுகிறது.

🎊 திருவிழா புகைப்படங்கள்

🙏 அருள்பாலிக்கும் தெய்வங்கள்

ஸ்ரீ அங்காளம்மன்

ஸ்ரீ அங்காளம்மன்

இத்திருக்கோயிலின் முதன்மை தெய்வம்

ஸ்ரீ மதுரை வீரன்

ஸ்ரீ மதுரை வீரன்

காவல் தெய்வம்

ஸ்ரீ கருப்பண்ணசாமி

ஸ்ரீ கருப்பண்ணசாமி

காவல் தெய்வம்

ஸ்ரீ பேச்சியம்மன்

ஸ்ரீ பேச்சியம்மன்

இக்கோயிலில் அருள்பாலிக்கும் தெய்வம்

ஸ்ரீ சடைச்சியம்மன்

ஸ்ரீ சடைச்சியம்மன்

இக்கோயிலில் அருள்பாலிக்கும் தெய்வம்

ஸ்ரீ ஆண்டிச்சியம்மன்

ஸ்ரீ ஆண்டிச்சியம்மன்

இக்கோயிலில் அருள்பாலிக்கும் தெய்வம்

ஸ்ரீ வீரபத்திரசாமி

ஸ்ரீ வீரபத்திரசாமி

இக்கோயிலில் அருள்பாலிக்கும் தெய்வம்

ஸ்ரீ தேவத்தியம்மாள்

ஸ்ரீ தேவத்தியம்மாள்

முன்னோர் தெய்வம்

🌸 திருத்தல சிறப்பு

இக்கோயிலில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

எங்களது முன்னோர் தேவத்தியம்மாள் முன்நின்று அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார்.

📍 திருக்கோயில் முகவரி

அருள்மிகு ஶ்ரீ அங்காளம்மன் திருக்கோயில்

நத்தப்பட்டி கிராமம்,
வேடசந்தூர் வட்டம்,
திண்டுக்கல் மாவட்டம்,
தமிழ்நாடு

அனைத்து பக்தர்களையும் வரவேற்கிறோம் 🙏

தொடர்ப்புக்கு

இக்கோயில் தர்மகர்த்தா
மா.சண்முகநாதன்

+91 99438 24335